Saturday, May 21, 2011

திருக்கல்யாணம்











சைவ சமயத்தில் நால்வர் என்று அழைக்கப்படுகிற நால்வரில் ஒருவரும் ஆளுடைப் பிள்ளை என்று இயற்பெயரும் கொண்ட ஞான சம்பந்தர் ஆறாம் நூற்றாண்டில் வைகாசி மூலத்தன்று ஆச்சாள்புர (நல்லூர் )த்தில் திருமண நாளன்று சிவனடியார்களோடு இறைவனோடு ஐக்கியம் ஆனார்.

சீர்காழி மாநகரில் பிறந்த ஞான சம்பந்தர் அன்னையின் திரு முலைப்பால் உண்டு ஞானம் பெற்றார். பல அற்புதங்களை செய்தார். சிவாலயங்கள் சென்று பதிகம் பாடி வழிபட்டார். உடன் திரு நீல கண்ட யாழ்ப்பாணர் இவருடன் மதங்க சூளாமணியார் இசை வழிபாடு செய்தார். அறுபத்து மூவரில் இருவர் 1. திருநீலநக்கர் ,2 . முருக நாயனார், என்று ஏராளமான சிவனடியார்களுடன்ஐக்கியம் ஆனார்கள் .

19.05.2011 காலை உபநயனம் செய்வித்து இரவு மாலைமாற்றல் , வைதீக முறைப்படி ஸ்தோத்ர பூர்ணாம்பிகை யுடன் திரு ஞான சம்பந்தர் திருமணம் நடைபெற்றது. அதற்கு சிதம்பரத்தில் இருந்து திருமண விருதுகள் மாலை களுடன் கொண்டு சென்று சாற்றப் பட்டது.

No comments:

Post a Comment