Monday, January 18, 2016

தில்லையே பூலோக கயிலாயம் ஆன தினம். ( தைப் பூசம் ) 24-01-2016 (ஞாயிறு )



 
                                                                          
                                                                     சிவமயம்
                                                               திருச்சிற்றம்பலம்
                                   
ஆக்கம் - உ.வெங்கடேச தீக்ஷிதர் M.A.,
              தில்லையே  பூலோக  கயிலாயம் ஆன தினம். ( தைப் பூசம் ) 24-01-2016 (ஞாயிறு )
      பதஞ்சலியும் வ்யாக்ர பாதரும் தவம் செய்து பெற்ற செல்வத்தை ( தில்லைத் திருநடனத்தை) திருமூலர் தன்னுடன் சேர்த்து எட்டு பேர் பார்த்தோம் என்கிறார் இந்த பாடலில் ,
 நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் , நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி ,                            மன்று தொழுத பதஞ்சலி வ்யாக்ரமர், என்ற இவர் என்னுடன் என்மருமாமே .
   பின் வரும் பாடலில் உலக மையமாக உள்ளது என்று
1.       தேவருரைகின்ற சிற்றம்பல மென்றும் ,   தேவருரைகின்ற சிதம்பர மென்றும்,     தேவருரைகின்ற திருவம்பல மென்றும், தேவருரைகின்ற  தென் பொதுவாமே .
    பதஞ்சலி வ்யாக்ர பாத மகத்துவம் சொல்லும் சில பாடல்களைக் காண்போம்.
     ஸ்ரீ நடராஜர் துதி
2.       ஆராலுங் காணுதற்கரிய சோதி  அம்பலத்தி லருளுருவா யணங்கு போற்ற                          பாரோரும் விண்ணோரும் பணிந்து போற்ற பதஞ்சலியும் புலிமுனியு மகிழ்ந்து காண        சீராரும் பொன்மயனற் பணிகள் செய்ய தில்லை மூவாயிரவர் தினமும் போற்ற                    மாறாத பேரின்பம் வழங்கு கின்ற  மன்றாடு மலர்ப்பாதம் போற்றி.  
  
3.        பதஞ்சலிக் கருளிய பரம நாடக என்று , பத்திதலைவர் பாட்டுடைப் பெரியோய், இதந்தரு மடந்தையோடு இரணிய மன்றில் , என்றும் நடஞ்செய இசைத்தாய் போற்றி, மதந்தரு மற்ற சமயிகள் எல்லாம் , மயங்கி வாடிட வைத்தாய் போற்றி ,சிதம்பர நடம்பயில் செழுங்கழல் நினது ,  செல்வமாம் எமக்கும் சேர்ப்பாய்  போற்றி.
பொருள் - மாணிக்கவாசகரால் " பதஞ்சலிக் கருளிய பரம நாடக " என்று பெருமை உடையவர், உயிர்கள் உய்ய சிவாகாமியுடன் ஸ்ரீ நடராஜரை தாண்டவம் ஆட இசைய வைத்தாய் மற்ற மதத்தவர் மயங்கி வாட வைத்தாய் , ஞான சபையில் தாண்டவத்தை, செல்வத்தை ,எளியேனுக்கும் அருள் செய் . என்றார்.
4.        தில்லையிலே நீ வந்து ஆட வேண்டும், தேச முள்ளார் அது கண்டுவாழ வேண்டும்,     எல்லையிலாப் பேரின்பம் எய்த வேண்டும், எவ்வுலகும் இதற்கு ஈடு இல்லை என்று, நல்லவர்கள் எல்லோரும் சொல்ல வேண்டும், நாதனே என்றென்று வேண்டிச்செய்த ,  வல்லார்கள்     பதஞ்சலிமா வியாக்ரபாத , மாமுனியை எப்போதும் வாழ்த்துவோமாக .
பொருள்- பலகாலம் தவம் செய்து சிதம்பரத்தில் பூலோக கையிலாயமாக விளங்க வேண்டும் என்று வேண்டிப் பெற்ற பதஜலியையும் , வ்யாக்ர பாதரையும் வாழ்த்து வோமாக!
5.       அந்தணர்கள் ஒரு மூவாயிரவரோடும், அருள் பெற்ற சிவகணங்கள் அயன்மாலோடும், செந்தழல்போல் திருமேனி ஒளியுங்காட்டி , சிவகாமி அம்மையுடன் நடனங்காட்டி , வந்தருளி இரு முனிவர் தவத்திற்காக , மாநடனக் காட்சியினை வையத்தார்க்கு, சந்தத்முங்  காண வரும் கருணை செய்த , தவமுனிவர் மெய்யருளைச் சாற்றோணாதே!

பொருள்- தேவர்கள்,பிரம்மா,விஷ்ணு, தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரோடும், சிவகாமி அம்மையோடும்,   தில்லையில்   நடனத்தை எல்லோரும் காணும்படிச் செய்த தவ முனிவரின் கருணை சொல்லி முடியாது. அந்தணர்கள் ஒரு மூவாயிரவரோடும், அருள் பெற்ற சிவகணங்கள் அயன்மாலோடும், செந்தழல்போல் திருமேனி ஒளியுங்காட்டி , சிவகாமி அம்மையுடன் நடனங்காட்டி , வந்தருளி இரு முனிவர் தவத்திற்காக , மாநடனக் காட்சியினை வையத்தார்க்கு, சந்தத்முங்  காண வரும் கருணை செய்த , தவமுனிவர் மெய்யருளைச் சாற்றோணாதே!

பொருள்- தேவர்கள்,பிரம்மா,விஷ்ணு, தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரோடும், சிவகாமி அம்மையோடும்,   தில்லையில்   நடனத்தை எல்லோரும் காணும்படிச் செய்த தவ முனிவரின் கருணை சொல்லி முடியாது.
      தென்றிசைக்கோர் பெருஞ்செல்வம்
6.       அருள் பெற்ற பெரியோர்கள் அநேகருண்டு ஆனாலும் பதஞ்சலியார் புலியைப் போல தெருள் பெற்ற மாமுனிவர் உலகிலில்லை தென்றிசைக்கோர் பெருஞ்செல்வம் தேடித் தந்தார்  பொருள் பெற்ற திருக்கூத்து புவனம் உய்ய பூரணிகண் டுளம்மகிழப் புரிந்து வைத்த இருள் பெற்ற உலகினுக்கு ஒளியைத் தந்த  இருமுனிவர் பதந்தொழுது இனிது வாழ்வாம்.
பொருள் -: சிவபெருமானுடைய அருளைப் பெற்றவர்கள் எண்ணில்லாதவர்கள். ஆனால் பதஞ்சலி வியாக்ரபாதரைப் போல அருள் பெற்றவர்கள் உலகத்தில் இல்லை. தென் திசைக்கு ஒப்பற்ற பெருஞ்செல்வத்தைத் தேடித் தந்தார்கள். பஞ்ச கிருத்திய மூலமாக உயிர்களுக்கு  அருள் செய்யும் திருவுளங்கொண்டு பொருளுடைய திருக்கூத்தினை உலகம் உய்ய உமாதேவி கண்டு மகிழ , மயக்கம் பொருந்திய உலகத்திற்கு ஞானமாகிய ஒளியைக் கொடுத்த இருமுனிவர் திருவடிக் கமலங்களை தொழுது இன்பமாக வாழ்வோமாக .
விளக்கம் -: சிவபெருமானுடைய அருளைப் பெற்றவர்கள் எண்ணில்லாதவர்கள். தன்னளவிலே பெற்றவர்களும் தமது திருவாக்கின் மூலமாக சிவனுடைய பெருமையைச் சொன்னவர்களும் இன்னும் வெவ்வேறு வகையாக அருளைப் பெற்றார்கள். இந்த இரு முனிவர்களும் (பதஞ்சலி , வியாக்ரபாதர் ) சிவபெருமானைக் கண்டு அளவில்லாத அருள்,பெற்று நடனக் காட்சியைக் கண்டு எப்போதும் திருக்கூத்தாடும்படிச் செய்து எக்காலமும் ,எல்லோருங்கண்டு பேரின்பத்தை அடையும்படிச் செய்தவர்கள். அதனால் இவர்களைப் போல அருள் பெற்றவர்கள் இல்லை என்பது உண்மையே. இறைவன் மற்றவர்களுக்கு வரம் கொடுத்து விட்டுப்  போய்விடுவான் . இவர்களுக்கு வரம் கொடுத்து உலகத்தாருக்கு வரம் கொடுப்பதற்காக அம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான். இதனால் பூரணி கண்டு மகிழ்கிறாள். புவனம் உய்ந்தது. மயக்கம் பொருந்திய உயிர்கள் அது நீங்கி தெளிவாகிய ஞானத்தைப் பெற்றது. இதுபோல யாரும் வரம் பெறவில்லை.            இருமுனிவர் வாழ்த்து .

7.        தில்லைவாழ் அந்தணர்தம் அடியாற்கும் அடியேன் என்று அருளினார் திருவாரூர் தியாகராசர், தில்லைவாழ் அந்தணர் ஒருவரைக் காணாது மனம் திகைத்து நின்றான் தெய்வ மன்னன் எல்லையிலா அருளாலே யாமஅவரில் ஒருவரென இயம்பினார் அம்பலத்தில் ஆடுவாரே நல்லதவப் பதஞ்சலியும் புலி முனியும் பாடுபட்டு அழைத்த பேரு நன்மை தானே.    

விளக்கம் _: திருவாரூரிலே சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு திருத்தொண்டத் தொகைபாடுவதற்கு , தில்லைவாழ் அந்தணர்தம் அடியாற்கும் அடியேன் என்று முதலடி தந்தருளினார் . தியாகராஜர். முன்னொரு சமயம் பிரம்ம தேவர் அந்தர்வேதி என்னும் இடத்தில் மிகப் பெரிய வேள்வி ஒன்று செய்யக்கருதி தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேர்களையும் அழைக்கத் தில்லைக்கு வந்து அவர்களை வேண்டினார். அப்போது நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும் அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்தால் வருவதாக வாக்களித்து ப்ரம்மாவுடன் சென்றனர். யாகம் சிறப்பாக முடிவுற்றது. பின் அந்தணர்கள் தில்லைக்குப் புறப்பட்டனர். பிரம்மதேவன் இதைக் கண்டு வந்த அதிதிகளுக்கு அன்னமிடாமல் அனுப்புகிறோமே என வருந்தி சாப்பிட்ட பின் செல்லலாம் என்று வற்புறுத்தியும் ஸ்ரீ நடராஜரைப் பூஜை செய்யாமல் உண்ணோம் எனக்கூற பிரம்மா மிகமிக வருந்தி ஈசனை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினார். அவரது உண்மையானப் பிரார்த்தனைக்கு இறங்கி வேள்வி தீயிலிருந்து ஜ்யோதிர்மயமான ஒரு உருவம் கிளம்பியது .அதைக் கண்ணுற்ற தீக்ஷிதர்கள் யாகத் திரவ்யங்களான  பால், தேன், சந்தனம் இவைகளால் அதை குளிரச் செய்து பார்த்ததில்      நடராஜரின் உருக்கொண்ட ப்ராதேசமாத்ர அளவு கொண்ட மாணிக்கமூர்த்தி தென்பட்டது.      பிரம்மா  இதைக் கண்டு களிப்புற்று ஈசனின் அருளாலேயே வந்தது இம்மூர்த்தி, ஆகையால் இம்மூர்த்தியைப் பூஜை செய்து விட்டு உணவு அருந்த வேண்டினார் . அந்தணர்கள் அவர்

வேண்டுகோளுக்கிணங்கி அம்மூர்த்தியையே பூஜை செய்துவிட்டு உணவருந்தினர். பிறகு இவர்களை ஒவ்வொருவராக தனித்தனி இரதத்தில் ஏறச்செய்து மூவாயிரம் இரதம் சூழ ஹிரன்யவர்மன் என்ற அரசனை  முதலாகக் கொண்டு தில்லையின் எல்லையை அடைவிக்க ஏற்பாடு செய்தார். அதன்படியே எல்லையை அடைந்ததும்  ஒவ்வொருவராக எண்ணிப் பார்க்கும் சமயம் ஒருவர் இல்லாமையைக் காண ஹிரன்யவர்மன் மிக வருந்தினான். அந்தோ! என்செய்வேன்! ஈசா அருளுவாய் என பலமுறை வேண்டித் துதித்தான். உடனே அசரீரியான ஒலி கேட்டது : வருந்தாதே தில்லை மூவாயிரவருள் நானும் ஒருவன் என்று இதைக்கேட்டு மிகவும் சந்தோஷம் தில்லைவாழ் அந்தணர்களை நடராஜராகவே எண்ணி அவர்களுக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து அவர்கள் தங்குவதற்கு மாடமாளிகைகள் கட்டி வாழச் செய்தான். அது முதற்கொண்டு இன்றளவும் அவர்களால் கொண்டுவரப்பட்ட மூர்த்திக்கு (ரத்தினசபாபதி) பால், தேன்,சந்தனம் இவைகள் மட்டும் தான் தினமும் காலை இரண்டாவது காலத்தில் (11 மணிக்கு ) அபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் இவர்களின் பெருமை தெளிவுற விளங்குகிறது.   
        மேற்கண்ட கருத்தும் வரலாறும் தெரிய நல்லதவப் பதஞ்சலியும், புலிமுனியும்   பாடுபட்டு அழைத்த பேரு நன்மை தானே .               ( பதஞ்சலி வியாக்ரபாத மகத்துவம் )
கடந்த 15-01-2016 அன்று முதல் ஒன்பது தினங்கள் ஆதி மூலநாதர் சன்னதியில் அர்த்தஜாம பூஜையில் பதஞ்சலி ,வ்யாக்ரபாதர் வழிபடும் நிகழ்வும், தைப் பூசத்தன்று பஞ்ச மூர்த்திகளுடன்   பதஞ்சலி ,வ்யாக்ரபாதரும் நான்கு வீதிகளிலும் வலம் வந்து சிவகங்கையில் தீர்த்த வாரி உத்சவமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் சன்னதியில் அன்னப் பாவாடையுடன்  பதஞ்சலி, வ்யாக்ரபாதர் தரிசனமும் நடைபெறும்,
தில்லையிலே தைப் பூசத்தன்று நடைபெறும் தீர்த்தவாரி உத்சவத்தில் கலந்து கொண்டு அருள் பெறுவோமாக.