Wednesday, April 25, 2012

"அட்சய திரிதியை'


                   அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை 
திரிதியை திதி என்பர்.சித்திரை மாதத்தில் வரும் திரிதியை திதி
 மிகச் சிறப்பானது.இதனைதான் "அட்சய திரிதியைஎன்பர்.
அட்சயம் என்றால் வளர்வதுகுறையாதது என்று பொருள்
அள்ள அள்ளக் குறையாதுஅள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது.
இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தானதர்மங்களும் 
அதிகப் பலன்களைத் தரும்என்பர்.


                   இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில்
 குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கைஎனவேதான் 
இந்நாளில்தங்கம் வாங்க விரும்புகின்றனர்ஆனால் இவ்வளவு 
விலை உயர்ந்த பொருளை னைவராலும் வாங்க இயலாது
அதற்கா மனம்தளர வேண்டாம்நமக்கு மிகவும் உபயோகமான
பொருட்களை வாங்கிப் பயனடையலாமேஅன்று உப்புஅரிசி 
மற்றும்தேவையான ஓரிரு ஆடைகள்ஏதாவது ஒரு சிறு பாத்திரம் 
என வாங்கலாம்எப்படியும் நாம் மாதாமாதம் 
மளிகைப் பொருட்கள்வாங்கி ஆக வேண்டும்அதனை 
இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சய திரிதியை நாளில் வாங்கி 
வளம் பெறலாமே.
                    
                    இந்த அற்புதமான திருநாளில்தான் குசேலன் தன் 
பால்ய குரு குல நண்பனான கண்ணபிரானைச் சந்தித்து தன 
வறுமையைப்போக்கிக் கொண்டான்குபேரன் சங்கநிதி
பதும நிதியை போன்ற நிதிகளைப் பெற்றான்பாண்டவர்கள் 
தங்களின்வனவாசத்தின்போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் 
பெற்றனர்இது மணிமேகலை பெற்ற அட்சய பாத்திரம்போன்றது.
டுக்க எடுக்க குறையாமல் உணவு வழங்கும் பாத்திரம்தான் இது
வனவாசத்திற்கு இதுதான் பெரிதும் பாண்டவர்களுக்குப்பயன்பட்டது.
                     
                       இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான 
சிவபெருமான் தன் பால (பிரம்ம கபாலம்பிட்சை பாத்திரத்தில் 
நிரம்பும்அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து 
பெற்றுக்கொண்டார்கௌரவர்கள் பையில் துச்சாதனன் 
பாஞ்சாலியின்உடையை உருவி மானபங்கப்படுத்தினான்
அப்போது கண்ணபிரான் "அட்சய' என்று 
கூறி கைகாட்டி அருளதுச்சாதனன் உருவஉருவ புடவை 
வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை 
நாளில்தான்இதனால்தான் பாஞ்சாலி மானம்காப்பாற்றப்பட்டது.
                       
                         வட இந்தியாவில் இந்நாளை "அகஜித்என்பர்
ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்
நிரந்தரமாகத்தங்கினாள்அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும்
தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.
                       ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும்
பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும்இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும்,
அரசர்களிடம் ராஜ லட்சமியாகவும்வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும்
குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும்பசுக்களில்கோமாதாவாகவும்
யாகங்களில் தட்சிணையாகவும்தாமரையில் கமலையாகவும்
அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகாதேவியாகவும் 
விளங்குகிறாள்ப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக 
விளங்குபவள் லட்சுமிதான்.னவேஅட்சயதிரிதியைஅன்று 
ஸ்ரீ மன் நாராயணனின் இணைபிரியாத தேவி 
ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்நம் இல்லத்தில் சாஸ்திரப்படி
பூஜைசெய்பவர்களுக்குதிருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.
அன்று செய்யும் தானர்மத்தால் மரண பயம் நீங்கி உடல்நலம்உண்டாகும்
அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின்
 கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்விமேம்படும்.

                சிதம்பரம் சபாநாயகர் (ஸ்ரீ நடராஜர் ) கோயிலில் 

ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில்

நிறுவனர் & செயலாளர் உ. வெங்கடேச தீட்சிதர் 

தலைமையில் 
ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது . (24-04-2012)