Thursday, April 21, 2011

தீர்த்தாம்பாளையம்

சிதம்பரம் வட்டம் தீர்த்தாம்பாளையம் கிராமத்தில்
பன்னெடுங்காலமாக அருள் புரிந்து வரும் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ
சுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம். கர வருஷம் சித்திரை மாதம் 7 (20-04-2011) புதன் காலை 9.45 மணியளவில் நடைபெற்றது. சர்வ சாதகம், ஆச்சாரியார் பாலஜோதிடர், சித்தாந்த ரத்திம் பிரம்ம ஸ்ரீஉ.வெங்கடேச
தீக்ஷிதர் எம்.ஏ., அதன் சில காட்சிகள்.

Wednesday, April 13, 2011

கர வருஷப்பிறப்பு


இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் வருஷப் பிறப்பை கொண்டாடி வருகிறார்கள் . இந்த ஆண்டு கர வருஷப் பிறப்பு 14.04.2011 நண்பகல் 11 மணி 34 நிமிஷத்திற்கு பிறக்கிறது . இந்த வருஷப்பிறப்புடன் சேர்த்து இந்தியாவில் உள்ள மேலும் சில மாநிலங்களின் வருஷப்பிறப்பும் கொண்டாடப்படுகிறது. அவை பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்கள் ஆகும் . அதனால் ஜோதிட இயல் ரீதியில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலமே வருஷப் பிறப்பாகும். எனவே அந்த நேரத்தில் கண்ணால் கண்டு வழிபடக்கூடிய கண் கண்ட கடவுள் சூரியனாகும் . சூரியனை வேண்டி வழி படவேண்டும் இது இந்துக்களின் பழமையான பண்டிகை களில் ஒன்றாகும் . தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Friday, April 8, 2011

sudarsana homam

இந்து மதத்தில் இறைவனுக்கு ஏதேனும் அர்ப்பணிக்க நினைத்தால் அதை அக்னி மூலமாக தான் கொடுக்க முடியும் என்று வழி காட்டி இருக்கிறார்கள் . அதன் படி வியாழக் கிழமை(7.4.2011) அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே அங்கராய நல்லூரில் திரு வெங்கட்ராமன் வீட்டில் வேண்டுதளுக்காக ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரக ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ மகாலக்ஷ்மி ஹோமம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் நடைபெற்றது . அந்த ஹோமத்தில் ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்த பொழுது அக்னி ஜ்வாலயில் பக்கத்தில் இருக்கும் (புனித நீர் கலசம்) ஸ்ரீ விஜயவல்லி சமேத ஸ்ரீ சுதர்சன மூர்த்தி இருக்கக்கூடிய இடத்தை நோக்கி ஒரு கருடன் உருவம் வந்து வழிபடுவதை இந்த படத்தில் காணலாம் . இந்த படத்தில் ஹோமம் செய்த அக்னியில் தனியாக மற்றும் மாதிரி (கருடன் )படம் வைக்கப்பட்டுள்ளது . இந்த ஹோமத்தை சிதம்பரம் பாலஜோதிடர் ,சித்தாந்த ரத்தினம் பிரம்மஸ்ரீ உ. வெங்கடேச தீக்ஷிதர் அவர்கள் நடத்தி வைத்தார்கள் . இந்த அதிசயத்தை எல்லோரும் கண்டு களிக்க வேண்டும் .

Thursday, April 7, 2011

பிரம்ம தீர்த்தம்
தில்லை (சிதம்பரம்) தலத்தின்தீர்த்தங்கள் 10 (பத்து) அவைகள் வியாக்ரபாத தீர்த்தம் ,அனந்த தீர்த்தம், நாகசேரி தீர்த்தம், புலிமடு தீர்த்தம், சிவப்ரியை தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம் குய்ய தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பரமானந்த கூபம் தீர்த்தம், என்று பத்து தீர்த்தங்கள் சிதம்பரத்தை
சுற்றி இருக்கிறது .அவற்றில் சில இப்போது உபயோகத்தில் இல்லை. திருப்பாற்கடல் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை அன்று (அமாவாசை மறுதினம்) இந்த தச தீர்த்ததிலயும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் பிரதி யான ஸ்ரீ சந்திரசேகரர் ரிஷப வாஹனத்தில் சென்று தீர்த்தவாரி உத்சவம் நடைபெறுவது வழக்கம் அதன் படி கடந்த திங்களன்று (04.04.2011) பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி உத்சவம் நடைபெற்றது. இது சிதம்பரத்தின் வட மேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்க்கு திருக்களான்சேரி சிங்காரதோப்பு என்றும் பெயர் உண்டு .மற்றும் ஒரு சிறப்பு இந்த இடத்தில சந்தான குரவர்கள் என்று அழைக்கப்படுகிற நால்வரில் மறைஞான சம்பந்தர் சமாதி அமைந்துள்ளது ஆகும்