Thursday, April 7, 2011

பிரம்ம தீர்த்தம்




தில்லை (சிதம்பரம்) தலத்தின்தீர்த்தங்கள் 10 (பத்து) அவைகள் வியாக்ரபாத தீர்த்தம் ,அனந்த தீர்த்தம், நாகசேரி தீர்த்தம், புலிமடு தீர்த்தம், சிவப்ரியை தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம் குய்ய தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பரமானந்த கூபம் தீர்த்தம், என்று பத்து தீர்த்தங்கள் சிதம்பரத்தை
சுற்றி இருக்கிறது .அவற்றில் சில இப்போது உபயோகத்தில் இல்லை. திருப்பாற்கடல் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை அன்று (அமாவாசை மறுதினம்) இந்த தச தீர்த்ததிலயும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் பிரதி யான ஸ்ரீ சந்திரசேகரர் ரிஷப வாஹனத்தில் சென்று தீர்த்தவாரி உத்சவம் நடைபெறுவது வழக்கம் அதன் படி கடந்த திங்களன்று (04.04.2011) பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி உத்சவம் நடைபெற்றது. இது சிதம்பரத்தின் வட மேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்க்கு திருக்களான்சேரி சிங்காரதோப்பு என்றும் பெயர் உண்டு .மற்றும் ஒரு சிறப்பு இந்த இடத்தில சந்தான குரவர்கள் என்று அழைக்கப்படுகிற நால்வரில் மறைஞான சம்பந்தர் சமாதி அமைந்துள்ளது ஆகும்

No comments:

Post a Comment