Sunday, May 6, 2012

ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம்


                         உ
                      சிவமயம்
                  திருச்சிற்றம்பலம்
           ஸ்ரீ நந்திகேஸ்வரர் (வரலாறு) புராணம்
             தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் திருவாதிரை நக்ஷத்திரத்தில் சிலாத முனிவரின் புதல்வராக நந்திகேஸ்வரர் அவதரித்தார்.
             முன்னர் ஒரு முறை கைலாயத்தில் நந்திகேஸ்வரர் வழக்கமான சேவைகளை செய்யும் போது தனக்கும் பூமியிலே போய் பிறவி எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அதை புரிந்து கொண்ட சிவபெருமான் ,சரி! உன்னுடைய எண்ணம் போல கயிலைக்கு சமமானதாகப்  போற்றப்படும் திருவையாற்றிலே சிலாத முனிவரின் குழந்தையாகப் பிறந்து உன் எண்ணம் போல திருமண வைபவங்கள் கண்டு கயிலைக்கு  வந்து சேரலாம் என்று அருள் செய்தார்.
              அதன்படி திருவையற்றிலே சிலாத முனிவரின் புதல்வனாக நந்திகேஸ்வரர் திருவாதிரை நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
              இன்றும் திருவையாற்றில் பங்குனி மாத திருவாதிரை நக்ஷத்திரத்தில் நந்திகேஸ்வரரின் ஜனன உற்சவமும், மாலை பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
               மறுநாள் திருவையாற்றை அடுத்த [சப்த ஸ்தலங்களில் ஒன்றான திருமழபாடி நந்திகேஸ்வரருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக  வியாக்ரபாத மகரிஷிக்கு சுயசாம்பிகை என்கிற மகளை முன்னதாகவே இறைவன் அருளினார்] அந்த சுயசாம்பிகையை புனர்பூச நக்ஷத்திரத்திலே முப்பத்து முக்கோடி தேவர்கள் சாக்ஷியாகவும், அக்னி சாக்ஷியாகவும், பஞ்சபூதங்கள் சாக்ஷியாகவும் மிகவும் விமரிசையாக ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு திருமண வைபவம் லக்ஷக்கனக்கான பக்தர்களும், சிவகணங்களும் கண்குளிர காண நடந்தேறியது.
குறிப்பு :-
               திருவையாற்றிலே நந்திகேஸ்வரர் மனித உருவத்தில் பிறந்து சிவகணங்களின் தலைவராக பட்டாபிஷேகம் முடிந்து சுயசாம்பிகையை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிவபெருமான் ரிஷப முகத்துடன் காக்ஷியளிக்கும்படி ஆணையிட்டார். அதன்படி நாம் நவக்கரை நந்தி கோவிலில் ரிஷப முகத்துடன் கூடிய     ஸ்ரீ நந்திகேஸ்வரர், சுயசாம்பிகைத் திருமண வைபவத்தை கயிலாயத்தில் நடைபெறுவது போல் கண்டு களிக்கிறோம்.
               நம் சைவ சமயத்தில் [பழமையான] சிவாலயங்களுக்கு செல்லும் பொது முதலில் விநாயகர் வழிபாடும் அடுத்ததாக அதிகாரநந்தியின் உத்தரவோடும் தான் சிவனை வழிபடுகிறோம். அதன்படி பல சிவாலயங்களில் ரிஷப வாகனம் என்றும், அதிகாரநந்தி (ரிஷப முகத்துடனும், கூப்பிய கரங்களுடனும், சிவபெருமானை போல் வலது கையில் மழுவும், இடது கையில் மானும் ஏந்தி காக்ஷியளிப்பார்) என்றும் உற்சவ காலங்களில் நந்தியின் பெருமையைப்  பறைசாற்றும் வண்ணம் மேற்படி வாகனங்களில் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதை காண்கிறோம். இங்கே 31 அடிஉயரமும், 21 அடி நீளமும். 12 அடி அகலமும் உள்ள மிகப்பெரிய நந்தி காட்சியளிக்கிறது. அதனால் இந்த இடம்  நந்தி கோவில் என்றே  அழைக்கப் படுகிறது. இந்த ஸ்தலத்தில் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு திருமண வைபவம் காண கண்கோடி வேண்டும்.
நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும்.
  “நந்தன ஆண்டில் நல்ல (கொடை) மழை பெறலாம்

எல்லாருடைய வாழ்விலும் சகல செல்வங்களும், வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுமாய் ஆசீர்வதிக்கிறோம்.

              நிகழும் நந்தன வருஷம் சித்திரை மாதம் 23(05-05-2012)சனிக்கிழமை சித்திரா பௌர்ணமி அன்று காலை கோயம்புத்தூர், நவக்கரை ஸ்ரீ நந்தி கோயிலில் ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன் சில படங்கள் இங்கே காணலாம்.              சுபம்     

Wednesday, April 25, 2012

"அட்சய திரிதியை'


                   அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை 
திரிதியை திதி என்பர்.சித்திரை மாதத்தில் வரும் திரிதியை திதி
 மிகச் சிறப்பானது.இதனைதான் "அட்சய திரிதியைஎன்பர்.
அட்சயம் என்றால் வளர்வதுகுறையாதது என்று பொருள்
அள்ள அள்ளக் குறையாதுஅள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது.
இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தானதர்மங்களும் 
அதிகப் பலன்களைத் தரும்என்பர்.


                   இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில்
 குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கைஎனவேதான் 
இந்நாளில்தங்கம் வாங்க விரும்புகின்றனர்ஆனால் இவ்வளவு 
விலை உயர்ந்த பொருளை னைவராலும் வாங்க இயலாது
அதற்கா மனம்தளர வேண்டாம்நமக்கு மிகவும் உபயோகமான
பொருட்களை வாங்கிப் பயனடையலாமேஅன்று உப்புஅரிசி 
மற்றும்தேவையான ஓரிரு ஆடைகள்ஏதாவது ஒரு சிறு பாத்திரம் 
என வாங்கலாம்எப்படியும் நாம் மாதாமாதம் 
மளிகைப் பொருட்கள்வாங்கி ஆக வேண்டும்அதனை 
இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சய திரிதியை நாளில் வாங்கி 
வளம் பெறலாமே.
                    
                    இந்த அற்புதமான திருநாளில்தான் குசேலன் தன் 
பால்ய குரு குல நண்பனான கண்ணபிரானைச் சந்தித்து தன 
வறுமையைப்போக்கிக் கொண்டான்குபேரன் சங்கநிதி
பதும நிதியை போன்ற நிதிகளைப் பெற்றான்பாண்டவர்கள் 
தங்களின்வனவாசத்தின்போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் 
பெற்றனர்இது மணிமேகலை பெற்ற அட்சய பாத்திரம்போன்றது.
டுக்க எடுக்க குறையாமல் உணவு வழங்கும் பாத்திரம்தான் இது
வனவாசத்திற்கு இதுதான் பெரிதும் பாண்டவர்களுக்குப்பயன்பட்டது.
                     
                       இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான 
சிவபெருமான் தன் பால (பிரம்ம கபாலம்பிட்சை பாத்திரத்தில் 
நிரம்பும்அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து 
பெற்றுக்கொண்டார்கௌரவர்கள் பையில் துச்சாதனன் 
பாஞ்சாலியின்உடையை உருவி மானபங்கப்படுத்தினான்
அப்போது கண்ணபிரான் "அட்சய' என்று 
கூறி கைகாட்டி அருளதுச்சாதனன் உருவஉருவ புடவை 
வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை 
நாளில்தான்இதனால்தான் பாஞ்சாலி மானம்காப்பாற்றப்பட்டது.
                       
                         வட இந்தியாவில் இந்நாளை "அகஜித்என்பர்
ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்
நிரந்தரமாகத்தங்கினாள்அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும்
தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.
                       ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும்
பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும்இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும்,
அரசர்களிடம் ராஜ லட்சமியாகவும்வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும்
குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும்பசுக்களில்கோமாதாவாகவும்
யாகங்களில் தட்சிணையாகவும்தாமரையில் கமலையாகவும்
அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகாதேவியாகவும் 
விளங்குகிறாள்ப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக 
விளங்குபவள் லட்சுமிதான்.னவேஅட்சயதிரிதியைஅன்று 
ஸ்ரீ மன் நாராயணனின் இணைபிரியாத தேவி 
ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்நம் இல்லத்தில் சாஸ்திரப்படி
பூஜைசெய்பவர்களுக்குதிருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.
அன்று செய்யும் தானர்மத்தால் மரண பயம் நீங்கி உடல்நலம்உண்டாகும்
அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின்
 கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்விமேம்படும்.

                சிதம்பரம் சபாநாயகர் (ஸ்ரீ நடராஜர் ) கோயிலில் 

ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில்

நிறுவனர் & செயலாளர் உ. வெங்கடேச தீட்சிதர் 

தலைமையில் 
ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது . (24-04-2012) 

Saturday, March 17, 2012

The miracle.

இன்று 16-3-2012 அகர ஆலம்பாடி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சம்வத்சராபிஷேகம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இதே தேதியில் (16-3-2011) வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று செய்த யாகத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சிம்மம் அக்னி ஜ்வாலையில் காட்சி தருவதை எல்லோரும் கண்டு களிக்க வேண்டுகிறேன்.


Monday, February 27, 2012

விண்வெளி அற்புதம்


இந்த படம் கடந்த 8-1-2012 ஆருத்ரா தரிசனத்தன்று நாசா விண்வெளி எடுத்தது. அதில் ஸ்ரீ நடராஜர் உருவம் வருகிறது.
நம் முன்னோர்கள் பல்லாண்டுகாலம் முன்பு எந்த உபகரணங்களும் இன்றி இந்த நிகழ்வை கண்டிருக்கிறார்கள்.
ஆனால் நமக்கு இது போன்று கருவிகளால் எடுத்த படம் தான் புரிகிறது.