Wednesday, May 25, 2011

இலங்கையில் ஹோமம்

இலங்கையில் அமைதி வேண்டி மஹா மிருத்யுஞ்சய ஹோமம்
3-11-2006 ல் நடைபெற்றது.

ஸ்ரீ முத்து கிருஷ்ணா மிஷன் டிரஸ்ட் சார்பில் பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மிருத்யுஞ்சய ஹோமம் ஸ்ரீ முத்து கிருஷ்ண ஸ்வாமியின் ஆணையின் வண்ணம் ஹார்ட்டன் பிளேஸ் என்ற நகரில் டாக்டர் திரு . ரகுநாத் இல்லத்தில் நடைபெற்றது.இலங்கை தமிழ் மக்களின் குல தெய்வமான சிதம்பரம் ஸ்ரீ நடராஜரின் அருளால் 3-11-2006 ல் பூர்த்தி நாளன்று பிரதோஷம் தில்லைவாழந்தனர்களைக் கொண்டு ஸ்ரீ கணபதி ,ஸ்ரீ நவக்ரகம், ஸ்ரீ சுதர்சனம்,ஸ்ரீ மகாலக்ஷ்மி, ஸ்ரீ ஆயுஷ்யம் , மற்றும் மஹா மிருத்யுஞ்சய ஹோமம் பூர்த்தி செய்யப்பட்டது . 4-11-2006 காலை கொழும்புவில் இருந்து “மீருகம” என்ற இடத்திற்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறிய பேருந்தில் “ தில்லைவாழ் அந்தணர்களை” அழைத்துச் சென்று பூமி பூஜை செய்து பூஜை அறையில் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பான விருந்தளித்து மாலையில் தில்லை அம்பலவாணருக்கு லக்ஷார்ச்சனை செய்து, விளக்கு பூஜையும் செய்து விழா இனிதே நிறைவேறியது.

இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வாமினி வித்தக விநாயக வடிவு {வித்தம்மா}அவர்களின் அருளாசியுடன் நடைபெற்றது.

Saturday, May 21, 2011

திருக்கல்யாணம்சைவ சமயத்தில் நால்வர் என்று அழைக்கப்படுகிற நால்வரில் ஒருவரும் ஆளுடைப் பிள்ளை என்று இயற்பெயரும் கொண்ட ஞான சம்பந்தர் ஆறாம் நூற்றாண்டில் வைகாசி மூலத்தன்று ஆச்சாள்புர (நல்லூர் )த்தில் திருமண நாளன்று சிவனடியார்களோடு இறைவனோடு ஐக்கியம் ஆனார்.

சீர்காழி மாநகரில் பிறந்த ஞான சம்பந்தர் அன்னையின் திரு முலைப்பால் உண்டு ஞானம் பெற்றார். பல அற்புதங்களை செய்தார். சிவாலயங்கள் சென்று பதிகம் பாடி வழிபட்டார். உடன் திரு நீல கண்ட யாழ்ப்பாணர் இவருடன் மதங்க சூளாமணியார் இசை வழிபாடு செய்தார். அறுபத்து மூவரில் இருவர் 1. திருநீலநக்கர் ,2 . முருக நாயனார், என்று ஏராளமான சிவனடியார்களுடன்ஐக்கியம் ஆனார்கள் .

19.05.2011 காலை உபநயனம் செய்வித்து இரவு மாலைமாற்றல் , வைதீக முறைப்படி ஸ்தோத்ர பூர்ணாம்பிகை யுடன் திரு ஞான சம்பந்தர் திருமணம் நடைபெற்றது. அதற்கு சிதம்பரத்தில் இருந்து திருமண விருதுகள் மாலை களுடன் கொண்டு சென்று சாற்றப் பட்டது.

அக்ஷய த்ரிதியை6.5.2011சிதம்பரம்
ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் அக்ஷய த்ரிதியையை முன்னிட்டு காலையில் அன்னதானமும் மாலை அம்பாள் சன்னதியில் வடுக பூஜை, கன்னியா பூஜை ,சுவாசினி பூஜை ,108 தம்பதி பூஜையும் நடைபெற்றது. அதன் சில காட்சிகள் .

Thursday, May 12, 2011

குருப்பெயர்ச்சி மகா யாகம்


கடலூர் மாவட்டம் ,சிதம்பரம் வட்டம், எறும்பூர் கிராமத்தில் ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத
ஸ்ரீ கதம்பவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்ரகங்களுக்கு குருப் பெயர்ச்சி விழா கொண்டாடப் பட்டது. 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டு தோறும் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடுவது வழக்கம் . அதே போல் இந்த ஆண்டும் குருப்பெயர்ச்சி
யைஒட்டி நவக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது .அதனை தில்லைவாழ்
அந்தணர்கள் பிரம்ம ஸ்ரீ உ.வெங்கடேசதீக்ஷிதர், உ.கேதார தீக்ஷிதர் நடத்தி வைத்தனர் .
இரவு 10.30 க்கு தொடங்கி நள்ளிரவு 1.05 வரை நவக்ரகங்களுக்கு குருப்பெயர்ச்சி ஹோமம் நடைபெற்றது. தக்ஷினாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

Tuesday, May 3, 2011

உமாபதிசிவம் குருபூஜை


நடராஜர் கோயிலில் குரு பூஜை விழா

சிதம்பரம் . ஏப் .26

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உமாபதி சிவம் குருபூஜை விழா நடந்தது.

உமாபதி தேவ நாயனார் குருபூஜை விழா தருமபுரம் ஞான புரீஸ்வர சுவாமி கோயிலிலிலும் மாலை சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் நடத்தப்பட்டது. தருமபுர ஆதீனம் சார்பில் அபிஷேக ஆராதனை நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செல்வ முத்துக்குமார சாமி தேசிகர் திருமுறை பண்ணிசையும்,பிரம்ம ஸ்ரீ உ. வெங்கடேச தீக்ஷிதர் ,எம். ஏ., முதன்மைஉரையும் ஆற்றினர். தமிழாசிரியர் கல்யாணராமன் , தமிழறிஞர் நாராயணமூர்த்தி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர். பன்னிரு திருமுறைகள் ஓதப் பட்டு மாகேஸ்வர பூஜைகள் நடத்தப் பட்டது. நன்றி தினமலர்