Saturday, December 10, 2016

மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவம் ( 11-01-2017)



                                          
                                       சிவமயம்

                                    திருசிற்றம்பலம்
                                   தில்லை
     
மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவம் ( 11-01-2017)
                     தன்னை மற்ற மதத்தினரும் வணங்கும் பாக்யத்தை          அளித்துள்ளார். ஈசன் உன்னிடம் பொன்னையோ பொருளையோ விரும்பவில்லை உன் பக்தியைத் தான் ஏற்கிறார். தன்னை நம்பியவர்களுக்கு பரம்பொருளாக விளங்குகின்றார். தானே ராஜாவாக யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்று அறிந்து அருள்பாலிக்கின்றார். தன்னை பூஜிக்க கைலாயத்திலிருந்து தில்லை மூவாயிரவரை மூவாயிரம் ரதத்தில் அழைத்து வந்த பெருமை நடராஜருக்கு உண்டு.                
சிதம்பரம்:  
                  சிதம்பரம் ஒரு மஹா புண்ய க்ஷேத்ரம். பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலம். ஐயன் அடியை சேர ஓர் எளிய முக்தி ஸ்தலம். கோயில் என்ற வார்த்தைக்கு பொருள் சிதம்பரம். நடராஜரை வணங்க கோடி கோடியாக பணம் வேண்டாம், வரிசையில் நிற்க வேண்டாம், மனம் இருந்தாலே போதும். உலகத்தின் மைய புள்ளியாக அமைந்திருக்கும் சிறப்புடையது. சந்திரமௌலீஸ்வரர் முதல் ரத்னசபாபதி வரை யாரும் கேட்காமல் அளித்தவர். மற்றொரு சிறப்பு சிவ வைணவ ஸ்தலம். நடராஜருக்கு வலது புறத்தில் கோவிந்தராஜ பெருமாள்(பள்ளிகொண்ட பெருமாள்) அமைந்திருக்கிறார்.
 சிதம்பர ரகசியம்:
           ஒரு ஆணும் பெண்ணும் சமம் என்று இங்கும் நிரூபித்துள்ளார். சைவத்தில் நாம் மூன்று விதமாக வணங்குகின்றோம், அவை-ரூபம்(உருவ வழிபாடு), அரூபம்- (மனதால் உணரும் வழிபாடு),ரூபாரூபம்-(லிங்க வழிபாடு). அதில் அரூபம் என்பது தான் ரகசியம் ஆகும். அரூப வழிபாடு நம் மனதை ஒரு நிலை அடைய செய்யும். சிதம்பர ரகசியம் என்பது          ஸ்ரீ சக்ரமும்(சிவகாமிக்கு உரியது) சிவ சக்ரமும்(நடராஜருக்கு உரியது) ஓரிடத்தில் மந்த்ர ரூபமாகவும், சிற்ப ரூபமாகவும் அமைந்துள்ளது. அது நம்மை போன்ற மானிடர்களின் கண்ணுக்குத்  தெரியாது. ஆதலால் அதன் மேல் பொன்னாலான பில்வ தளங்கள் தொங்க பட்டிருக்கும். அதனை தரிசிக்கும் பொழுது நாம் தீயவைகளை விட்டு பிரிகின்றோம்.
திருவிழாக்கள்:
       சித்திரை – சித்ரா பௌர்ணமி, மஹாபிஷேகம்
           வைகாசி – வைகாசி விசாகம், வைகாசி பூசம் சேக்கிழார் (63) வர் உலா,  
           ஆனி    - ஆனித் திருமஞ்சனம்
           ஆடி    - ஆடிப் பூரம்
           ஆவணி  - பவித்ராரோபனம், மஹாபிஷேகம்
           புரட்டாசி – நவராத்திரி (கொலு) , மஹாபிஷேகம்
           ஐப்பசி   - ஐப்பசி பூரம்(சிவகாமிக்கு), சூரசம்ஹாரம்(செல்வ முத்து குமார சுவாமிக்கு)
           கார்த்திகை – கார்த்திகை தீபம்(சபைக்கு எதிரே)
           மார்கழி    - ஆருத்ரா தரிசனம்
           தை       - தை பூசம், தை அமாவசை(தீர்த்தவாரி)
           மாசி      -  மஹாபிஷேகம், மாசி மகம் (தீர்த்தவாரி)
           பங்குனி   - பங்குனி உத்திரம்
               இது மட்டுமல்லாமல் பௌர்ணமி, அமாவாசைகளில் சிவகங்கையில் தீர்த்தவாரி நடைபெறும். அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் குருபூஜை திருநாட்களில் நடராஜருக்கு எதிரே நாயன்மாரை கொண்டு வந்து இரவு இரண்டாம் காலத்தின் பொழுது சிறப்பு வழிபாடு நடைபெறும். திருஞானசம்பந்தருக்கும், மாணிக்கவாசகருக்கும் மதியம் உச்சி காலத்தில் குருபூஜை நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தில் ஒன்றாம் திருநாள் முதல் எட்டாம் திருநாள் வரை எட்டு நாட்களும் சபையில் ஸ்ரீ நடராஜருக்கு சாயரக்ஷயில் மாணிக்கவாசகர் ஓதுவார் திருவெம்பாவை பாட தீபாராதனையும் தேரன்று ஸ்ரீ நடராஜருக்கு எதிரே அழைத்து வரப்பட்டு தீபாராதனை நடைபெறும். மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவம் ( 11-01-2017) அன்று மாணிக்கவாசகரிடம் ஸ்ரீ நடராஜர் “ஆனி மகத்தன்று வா  என  அழைத்தார். ஆனித் திருமஞ்சனத்தில் எட்டாம் திருநாளன்று (ஆனி மகத்தன்று) மதியம் உசசிகாலத்தில் குருபூஜை நடைபெறும்.