Friday, November 4, 2011

மஹாநவமி



நம்முடைய இந்து மதத்தில் எத்தனை விதமான நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை பறந்து விரிந்த இந்த தேசத்தில் நீருக்கு பஞ்ச பூதங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன்படி கங்கை கங்கோத்ரியில் உற்பத்தியாகி நம்முடைய தேசம் முழுவதும் பரவி மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலப்பது நாம் அறிந்ததாகும். அப்படி கங்கை ஐப்பசி (துலாம்) மாதம் காவேரியில் கலப்பதற்காக வடக்கிருந்து கிளம்பி சிதம்பரத்திற்கு இன்று மஹாநவமி (கங்கை) நடராஜர் அபிஷேகத்திற்கான பரமானந்த கூபம் என்று அழைக்கப் படுகிற கிணற்றிற்கு வருகிறாள் என்பது ஐதீகம்.அதன்படி இன்று கங்கைக்கு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு பூஜை செய்த புனித நீர் வழங்கப் பட்டது. இங்கிருந்து கிளம்பி கடை முகத்திற்கு மயிலாடுதுறை சென்று அங்கிருந்து கார்த்திகை அமாவாசை அன்று திருவிசலூர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவர்களின் வீட்டில் இருக்கும் கிணற்றிற்கு செல்வதாக ஐதீகம் அங்கிருந்து மாசி மாதம் கும்பகோணம் மஹா மக குளம் சென்று நம் பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். இந்தியா முழுவதும் இது போன்ற இன்னும் பல விதமான நம்பிக்கைகள் உள்ளது அதில் இது சிறப்பாகும்.

No comments:

Post a Comment