Wednesday, December 8, 2010

koil

திருச்சிற்றம்பலம்
திருமுறைகளில் பாடப்பட்ட பாடல்களிளேயே அதிகமான பாடல்களில் இனி எனக்கு பிறவியே வேண்டாம் என்ற பொருளி;ல் தான் பாடல்கள் அமைந்திருக்கும் ஆனால் தில்லையில் மட்டும் அதற்கு மாறாக பிறவி வேண்டும் என்று கேட்டு இரண்டு பாடல்கள் அமைந்திருப்பது என்றால் (தில்லை) சிதம்பரத்தின்; சிறப்பைப் பற்றி நம்மால் எப்படி கூறமுடியும். உணர மட்டுமே முடியும்.
அந்த பாடல்கள் (கோயில்) என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்தில் திருநாவுக்கரசர் ஐந்தாம் (5) திருமுறையில் திருக்குறுந்தொகை என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே. (1)
திருநாவுக்கரசர் நான்காம் (4) திருமுறையில் திருவிருத்தம் என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமின் சிறிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே. (2)
இந்த பதிகப் பாடல் மூலம் மனிதனாகப் பிறந்த அனைவரும் தரிசிக்கவேண்டும் என்கிற கருத்தை நமக்கு காட்டுகிறார். தரிசிக்க முக்தி தரும் தலம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பாகும். உ
திருச்சிற்றம்பலம்
திருமுறைகளில் பாடப்பட்ட பாடல்களிளேயே அதிகமான பாடல்களில் இனி எனக்கு பிறவியே வேண்டாம் என்ற பொருளி;ல் தான் பாடல்கள் அமைந்திருக்கும் ஆனால் தில்லையில் மட்டும் அதற்கு மாறாக பிறவி வேண்டும் என்று கேட்டு இரண்டு பாடல்கள் அமைந்திருப்பது என்றால் (தில்லை) சிதம்பரத்தின்; சிறப்பைப் பற்றி நம்மால் எப்படி கூறமுடியும். உணர மட்டுமே முடியும்.
அந்த பாடல்கள் (கோயில்) என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்தில் திருநாவுக்கரசர் ஐந்தாம் (5) திருமுறையில் திருக்குறுந்தொகை என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே. (1)
திருநாவுக்கரசர் நான்காம் (4) திருமுறையில் திருவிருத்தம் என்கிற வகைப் பதிகத்தில் பாடியிருக்கிறார்கள்
அவை
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமின் சிறிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே. (2)
இந்த பதிகப் பாடல் மூலம் மனிதனாகப் பிறந்த அனைவரும் தரிசிக்கவேண்டும் என்கிற கருத்தை நமக்கு காட்டுகிறார். தரிசிக்க முக்தி தரும் தலம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பாகும்.

No comments:

Post a Comment