Saturday, March 19, 2011

அகர ஆலம்பாடி கும்பாபிஷேகம்


சேத்தியாதோப்பைஅடுத்த அகர ஆலம்பாடியில் சன்னியாசியப்பன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை துவங்கியது.தொடர்ந்து, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, திரவிய ஆகுதி, பூர்ணாகுதி பூஜைகள் நடந்தன. பின்னர் யந்திரஸ்தாபனமும், மருந்து சாத்துதலும் நடந்தது. 16ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு யாத்ராதானமும், தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. 10 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. சன்னியாசியப்பன் கோவிலில் செல்வமணி சிவாச்சாரியாரும், மாரியம்மன் கோவிலில் வெங்கடேச தீட்சிதரும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்து வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Monday, March 14, 2011

திருவேதிகுடி மஹாருத்ரம்



தமிழ்நாட்டில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276 உள்ளது அதில் தஞ்சை அருகில் திருவையாறு மற்றும் ஏழு ஸ்தலங்கள் உள்ளது அந்த வரிசையில் திருவேதிகுடி என்று ஒரு ஸ்தலம் உள்ளது. மங்கையர்க்கரசி சமேத ஸ்ரீ வேதபுரிஈஸ்வரர்
சன்னதியில் 13.03.2011 அன்று மகாருத்ர ஜப பாராயணமும் ஸ்ரீருத்ர ஹோமம் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது திருவான்மியூர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள் மிக விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி மகா ருத்ர ஜபம் ஹோமம் நடத்தப் பட்டது

Saturday, March 5, 2011

மகாசிவராத்திரி(2)


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது .ஏழு கால ருத்ராபீஷேகமும் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வா பூஜை, வடுக பூஜை, கன்னியாபூஜை, சுவாசினி பூஜை, மற்றும் தம்பதி பூஜை நடைபெற்றது. லக்ஷ தீபம் ஏற்றப்பட்டது.