Saturday, February 26, 2011

மகாசிவராத்திரி



ஸ்ரீ சபாபதி சங்கீதா கான சபா டிரஸ்ட் வழங்கும் மகாசிவராத்திரி கானாஞ்சலி விழா 24.2.2011 இன்று தொடங்கியது 2.3.2011 வரை நடைபெறுகிறது .

Tuesday, February 22, 2011

கும்பாபிஷேகம்



திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைகுறிச்சி கிராமத்தில் முதலியப்பபுரத்தில் ஹரிஹர குக பஜனை மண்டலியில் வெள்ளியினால் செய்யப்பட்ட ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு 20.2.11 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது

Saturday, February 12, 2011

அன்னதானம்

அன்னதானம் செய்வதால் என்ன கிடைக்கும் என்று சிவ வாக்கியர் தன் பாடலில் விளக்கி இருக்கிறார் அந்த பாடல் இதுதான் ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும் கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்யும் தருமமும் சாடி விட்ட குதிரை போல் தருமம் வந்து நிற்குமே சிவ வாக்கிய சித்தர் பாடல் இதன் பொருள் தருமம் செய்வது போல் ஒரு செயல் இல்லை என்றும், தர்மம் தான் நம்முடைய இம்மைக்கும் மறுமைக்கும் துணை நிற்கும் என்றும் தெரிவிக்கிறார். அதிலும் உணவு கொடுப்பது (அன்னதானம் ) தான் உகந்தது என்றும் அறுதியிட்டு கூறுகிறார் .