
சேத்தியாதோப்பைஅடுத்த அகர ஆலம்பாடியில் சன்னியாசியப்பன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை துவங்கியது.தொடர்ந்து, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, திரவிய ஆகுதி, பூர்ணாகுதி பூஜைகள் நடந்தன. பின்னர் யந்திரஸ்தாபனமும், மருந்து சாத்துதலும் நடந்தது. 16ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு யாத்ராதானமும், தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. 10 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. சன்னியாசியப்பன் கோவிலில் செல்வமணி சிவாச்சாரியாரும், மாரியம்மன் கோவிலில் வெங்கடேச தீட்சிதரும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்து வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.