Tuesday, December 7, 2010

THIRUTHANDAGAM


சிவமயம்
திருத்தாண்டகம்

தாண்டகவேந்தர் என்று சிறப்புப்பெயர் பெற்ற திருநாவுக்கரசர் தமது திருவாரூர் திருத்தாண்டகத்தில் ஒரு கேள்வியை கேட்டு அதற்கு சிதம்பரம் திருத்தாண்டகத்தில் பதிலையும் தந்திருக்கிறார்கள் என்றால் அது அபூர்வமாக அமைந்திருக்கிறது.
அவை

பாடகம்சேர்மெல்அடிநற்பாவையாளும்
நீயும்போய்ப்பார்த்தனதுபலத்தைக்காண்பான்
வேடனாய்வில்வாங்கிஎய்தநாளோ
விண்ணவர்க்கும்கண்ணவனாய்நின்றநாளோ
மாடமொடுமாளிகைகள்மல்குதில்லை
மணிதிகழும்அம்பலத்தைமன்னிக்கூத்தை
ஆடுவான்புகுவதற்குமுன்னோபின்னோ
அணிஆரூர்கோயிலாக்கொண்டநாளே. (1)

கார்ஆர்கமழ்கொன்றைக்கண்ணி
சூடிக்கபாலம்கைஏந்திக்கணங்கள்பாட
ஊரார்இடுபிச்சைகொண்டுஉழலும்
உத்தமராய்நின்றஒருவனார்தாம்
சீர்ஆர்கழல்வணங்கும்தேவதேவர்
திருஆரூர்மூலட்டானம்மேயார்
போர்ஆர்விடைஏறிப்பூதம்சூழப்
புலியூர்ச்சிற்றம்பலமேபுக்கார்தாமே. (2)

அதாவதுமுதல்பாடலில்
மாடமொடுமாளிகைகள்மல்குதில்லை
மணிதிகழும்அம்பலத்தைமன்னிக்கூத்தை
ஆடுவான்புகுவதற்குமுன்னோபின்னோ
அணிஆரூர்கோயிலாக்கொண்டநாளே.

என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

பிறகு சிதம்பரம் திருத்தாண்டகத்தில் அதற்கானபதிலையும் தந்திருக்கிறார்


சீர்ஆர்கழல்வணங்கும்தேவதேவர்
திருஆரூர்மூலட்டானம்மேயார்
போர்ஆர்விடைஏறிப்பூதம்சூழப்
புலியூர்ச்சிற்றம்பலமேபுக்கார்தாமே.


என்று (அதாவது)
திருவாரூர்மூலட்டானத்தில்அருள்புரியும்பெருமான்காளைஏறிபூதகணங்கள்புடைசூழபுலியூர்என்றுஅழைக்கப்படுகின்றதில்லை (சிதம்பரத்தை)சென்றுசேர்ந்தார்என்றுபாடலைபாடியிருக்கிறார்.
பொதுவாகஒருவழக்குஉண்டு (திருவாரூரில்பிறக்கமுக்தியும்சிதம்பரத்தைதரிசிக்கமுக்தியும்) திருவாரூரில்சாயரக்ஷைபூஜையையும்சிதம்பரத்தில்அர்த்தஜாமபூஜையையும்பார்க்கவேண்டும்என்றும்அதன்படிஇந்தசிறப்புஅமைந்திருக்கிறது.
தினமும்காலை (6-00 மணி)தில்லை நடராஜப்பெருமான் தன்னுடையகலைகளை எல்லா ஆலயங்களுக்கும் அனுப்பி ஆங்காங்கே நடைபெறும் பூஜைகளை ஏற்று இரவு பத்துமணிக்குதில்லை(சிதம்பரத்தை) வந்துசேர்கிறது எனவே முடிந்தவர்கள் முயற்சி செய்து முக்திபெறலாமே. (இப்படி தரிசித்தவர்களைப்பற்றி கேட்டதுண்டு, பார்த்ததும் உண்டு)

சிதம்பரம்கோயில்காலை 6 மணிமுதல்மதியம் 12 மணிவரை
திறந்திருக்கும்நேரம்மாலை 5 மணிமுதலஇரவு 10 மணிவரை

No comments:

Post a Comment