

பிரதோஷம் காலத்தின் சிறப்பு.
வளர்பிறையில் ,மற்றும் தேய்பிறையில் ,வரும் த்ரயோதசி அன்று மாலை 4 .30 மணி முதல் 6 மணி வரையுள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும் .
தில்லை நடராஜப்பெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நடனம் செய்து தேவர்களுக்கு தரிசனம் தந்தருளிய சிறப்புடைய காலம் இது. ஆதலின் பிரதோஷ புண்ணியகாலம் என்று மக்கள் வழக்கில் வழங்கப்படுகிறது . இக்காலத்தில் சிவபெருமானை வழிபடுவதும் தரிசிப்பதும் மிகப்பெரிய புண்ணியமாகும் .சிவ தரிசனதிற்குரிய காலமும் இதுவே ஆகும்.